விடைபெற்றார் சச்சின், இந்திய அணி அபார வெற்றி

விடைபெற்றார் சச்சின், இந்திய அணி அபார வெற்றி

விடைபெற்றார் சச்சின், இந்திய அணி அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 3:13 pm

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது இன்னங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றது.
இந்த போட்டியுடன் கிரிக்கெட் உலகிற்கு விடைபெறும் சச்சின் டெண்டுல்காருக்கு ரசிகர்களும் , அனைத்து வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
24 வருடங்கள் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய  சச்சின் டெண்டுல்கர், தனது இறுதி  டெஸ்ட் போட்டியில் 74 ஓட்டங்களை குவித்து   252 சதம், 68 அரை சதம் உள்ளடங்களாக டெஸட் போட்டிகளில் 15,921 ஓட்டங்களை குவித்துள்ளார்.
463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 18 ஆயிரத்து 426 ஓட்டங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்