மாலைத்தீவின் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் இன்று

மாலைத்தீவின் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் இன்று

மாலைத்தீவின் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் இன்று

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 10:20 am

மாலைதீவின் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில்’ முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் 46 வீத வாக்குகளை பெற்று முன்னிலையிலுள்ளார்.
எனினும்  வேட்பாளர்கள் 50 வீத வாக்குகளை  பெறாத காரணத்தினால் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படவிருந்தது.
எனினும் அந்நாட்டு உச்ச நிதிமன்றம் தேர்தலை 6 நாட்கள் பிற்போடுமாறு உத்தரவிட்டது.
கடந்த பல மாதங்களாக இழுபறியில் உள்ள மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் இன்று சுமூகமான முறையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் மொஹமட் வஹீட் பதவியிலிருந்து விலகியமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்