பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 12:40 pm

பிலிப்பைன்ஸை கடந்த வாரம் தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3633 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சடலங்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினரும் மீட்புப் பணியாளர்களும் ஈடுபட்டுவருகின்ற நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதுடன், அமெரிக்க இராணுவத்தின் ஒத்துழைப்புடனும் மீட்புப் பணிகள் தொடர்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அனர்த்ததில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்