பஸ்கள் மீது கல்வீச்சு

பஸ்கள் மீது கல்வீச்சு

பஸ்கள் மீது கல்வீச்சு

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 3:53 pm

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிவந்த 2 பஸ்கள் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபையின் களனி டிப்போவிற்கு சொந்தமான பஸ் மீதும் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.
மோட்டார் சைக்கிளின் வந்ததாக கூறப்படும் இருவரே கற்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்கள் மீதான கல்வீச்சு சம்பவங்கள் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்