நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் – கெமரன்

நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் – கெமரன்

நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் – கெமரன்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 12:00 pm


இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் மார்ச் மாதத்திற்குள் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஊடக மையத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்கெவல்ல, நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இதேவேளை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் கொழும்பில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அமர்வுகளுக்கு புறம்பாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
2013 பொதுநலவாய மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் திருப்தி வெளியிட்டுள்ளார்.
யோசனைகள் சில முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும், இந்த மாநாட்டை புறக்கணிப்பதற்கு தாம் எண்ணியிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தமது வட பகுதிக்கான விஜயம் குறித்தும் இதன்போது பிரித்தானிய பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள டேவிட் கெமரன், மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் காணப்படுவதாகவும்  குறிப்பிட்டிருந்தார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்