தொடர் தென்னாபிரிக்கா வசம்

தொடர் தென்னாபிரிக்கா வசம்

தொடர் தென்னாபிரிக்கா வசம்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 10:55 am

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு-20 சர்வதேச கிரிக்கெட் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.
டுபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெனனாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில்   பவ் டு பிலசிஸ் ( Faf du Plessis) அதிக பட்ச ஓட்டங்களாக 58 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
பந்துவீச்சில் சயீட் அஜ்மல் 3 விக்கட்டுக்களையும் , சொகய்ல் தன்விர் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
151 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.
இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்