ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டை தவிர்ப்பதற்கு தீர்மானித்தது ஏன்? – ஜொனதன் மில்லர்

ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டை தவிர்ப்பதற்கு தீர்மானித்தது ஏன்? – ஜொனதன் மில்லர்

ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டை தவிர்ப்பதற்கு தீர்மானித்தது ஏன்? – ஜொனதன் மில்லர்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 8:56 am

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இலங்கை பேச்சாளர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பேச்சாளர் ஆகியோர் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது செனல்_4 ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் கேள்வியெழுப்பியிருந்தார்.ஜொனதன் மில்லர் தெரிவித்த கருத்து :-
“சனல் 4 ஊடகவியலாளர். நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஜனாதிபதி இவ்வாறான விசேட செய்தியாளர் மாநாட்டை தவிர்ப்பதற்கு தீர்மானித்தது ஏன்? நான் நேரடியாகவே கேட்கிறேன். பாரதூரமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விடுவதற்காகவா அவர் இதனை தவிர்த்துக்கொண்டார்”
இதனையடுத்து பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இலங்கை பேச்சாளர் அனுராதா கே. ஹேரத் பதிலளித்தார்.அனுராதா கே. ஹேரத் தெரிவித்த கருத்து :–
“இது தவறான கருத்தாகும். இதனை ரத்து செய்தது ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் அல்ல. ரிச்சட் கூறியது போன்று தலைவர்களிடையேயான பேச்சுவார்த்தை எதிர்பார்க்காதவாறு நீண்டு சென்றது. அதனால். இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்த தீர்மானித்திருந்தோம். மாநாட்டுக்கு முன்பதாக ஒன்றும் அதன் பின்னர் ஒன்றும். ஜனாதிபதி நான்கையும் செய்வோம் என கூறினார். இதனை முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தோம். அதன்போது நீங்கள் இருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்திலும் பின் வாங்காமல் சிரமமான கேள்விகளுக்கும் பதலளித்தார். இதனை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுடன். தேநீர் அருந்த அழைத்திருக்கிறார். அவர் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகின்றது”
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது ஊடகத்துறை மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கருத்து தெரிவித்தார்.அஸ்வர் தெரிவித்த கருத்து :-
“அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள், எனது பெயர் ஏ.எச்.எம்.அஸ்வர் நான் ஒரு இலங்கைப் பிரஜை.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இங்கு பல கேள்விகள் தொடுக்கப்பட்டன.எவருடைய  மனித உரிமைகள் அதிகளவில் மீறப்பட்டுள்ளன?உங்களுக்கு தெரியும் யாழப்பாணம்.பிரித்தானிய பிரதமரும் இன்று அங்கு இருக்கின்றார். 75 ஆயிரம் முஸ்லிம் மக்கள் விடுதலை புலிகளினால் அங்கிருந்து வெளியெற்றப்ட்டனர்.ஏன் நீங்கள் அதாவது பொதுநலவாய நாடுகள் அதனை இம்மியலவேனும் கருத்திற்கொள்ளவில்லை. சிறுவர் போராளிகள் தொடர்பில் உங்களுக்கு தெரியும்.அவர்களின் உரிமைகளும் மீறப்பட்டன.ஏன் அது தொடர்பில் பொதுநலவாய அமைப்பு பேசவில்லை.இது தொடர்பிலேயே நான் வினாவுகின்றேன்.எமது ஜனாதிபதி எந்தவொரு கேள்விகளுக்ககோ அல்லது  ஊடக  சந்திப்புகளுக்ககோ பின்வாங்கும் ஒருவரல்ல. மெக்ரய் உட்பட சனல் 4 ஊடகவியலாளர்கள் இந்த இடத்தில் உள்ளனர்.இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம்”
பொதுநலவாய அமைப்பின் பேச்சாளர் ரிச்சர்ட் உகு இதன்போது குறுக்கிட்டு சில கருத்துகளை தெரிவித்தார்.ரிச்சட் தெரிவித்த கருத்து :-
“யுத்தம் ஒன்று இடம்பெறும் போது அசாம்பாவிதமான சம்பவங்கள் காணப்படகூடும்.இங்கு இரண்டு தரப்பினராலும் இது இடம்பெற்றுள்ளது.எனக்கு விளங்குகின்றது  நீங்கள் கோபத்துடன் உள்ளீர்கள்.எனது பதில்கள் தேவையாயின் அதனை சிவில் முறைமையில் பெற்றுகொள்ளமுடியும்”

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்