சம்பூரில் பிரதேச மக்கள் சாத்வீக கவனயீர்ப்பு போராட்டம்

சம்பூரில் பிரதேச மக்கள் சாத்வீக கவனயீர்ப்பு போராட்டம்

சம்பூரில் பிரதேச மக்கள் சாத்வீக கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 5:00 pm

திருகோணமலை சம்பூர் பகுதி மக்கள் தம்மை மீளக் குடியமர்த்துமாறு கோரி, இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையில், மூதூர் கிளிவெட்டி இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு முன்பாக இடம் பெற்றது.
கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் தம்மை மீளக் குடியமர்த்தக்கோரி இன்யை தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருந்தனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு எதிராக வேறொரு குழுவினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்
இந்த இரு குழுக்களினது ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக மூதூர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜீத் ரோகஹன தெரிவித்தார்.
இருப்பினும் மற்றைய தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் செய்ய தயாராக இருந்த இடத்திற்கு வந்தமையால், பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இடதத்திற்கு வருகை தந்து கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடினர்.
பொலிஸாருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் அனுமதியளித்தனர்.
ஏழு வருடங்களாக சம்பூரில் இருந்து இடம் பெயர்ந்த சுமார் 2 600
குடும்பங்கள் கிளிவெட்டி முகாமில் வசித்து வருகின்றன.
சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து வாகரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த மக்கள், தற்போது மூதூர் கிளிவெட்டி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கருத்து வெளியிட்டனர்
இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் அங்கு கருத்து வெளியிட்டார்.
சம்பந்தன் தெரிவித்த கருத்து :-
நேற்றும், முன்தினமும் நாங்கள் பல உலக தலைவர்களை சந்தித்திருக்கிறோம்.
பிரதமர்களை வெளிவிவகார அமைச்சர்களை , வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை, பல நாடுகளை சேர்ந்தவர்கள், முக்கியமான நாடுகளை சேர்ந்தவர்களை. சம்பூர் விடயத்தைபற்றி நாங்கள் பேசினோம். ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் நிம்மதி, சமாதானம், புரிந்துணர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டுமாக இருந்தால் எல்லா மக்களும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும். விசேடமாக மக்களுடைய சொந்த காணிகளை அவர்கள் கொள்ளையடிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து மேலும் தாமதமில்லாமல் இந்த பகுதியை சார்ந்த மக்களை தங்களுடைய சொந்த காணிகளில் குடியேற்றுவதற்கு தாமதம் இல்லாமல் நீங்கள் செயற்பட வெண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நியூஸ் பெர்ஸ்டுக்கு கருத்து வெளியிட்டார்
சுமந்திரன் தெரிவித்த கருத்து :-
“உலகத்தார் இதனை பார்க்க வேண்டும். இந்த அநியாயத்தை நோக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இந்த மக்களை இவ்வளவு காலமும் தங்களுடைய பிரதேசங்களுக்கு தங்களுடைய சொற்த காணிகளுக்கு தங்களுடைய சொந்த காணிகளுக்கு இடங்களுக்கு போகாமல் தடுத்து வைக்கின்ற அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும். உலக தலைவர்கள் இந்த நாட்டிற்கு வந்திருக்கின்ற இந்த வேளையிலே, இந்த கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என இந்த மக்கள் கோரி நிற்கிறார்கள்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கடந்த காலங்களில் காணாமல் போன உறவினர்களின் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கையளித்தனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்