சச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு

சச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு

சச்சின் டென்டுல்களின் சாதனைமிகு கிரிக்கெட் பயணம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 7:32 pm

கிரிகெட் உலகில் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்று வர்ணிக்கப்பட்டட்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெல்டுல்கரின்சாதனை நிறைந்த கிரிகெட் பயணம் இன்று முடிவுக்கு வந்தது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தமான சச்சின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற்றுள்ளார்.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மும்பையில்  பிறந்த ரமேஸ் சச்சின் டெண்டுல்கர் தனது  11 ஆவது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது 16 ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கெதிராக தனது சர்வதேச போட்டி அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சர்வதேச சதத்தை பெற்ற சச்சின் டெண்டுல்கர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 11 டெஸ்ட் சதங்களையும்,இலங்கை அணிக்கெதிராக 9 டெஸ்ட் சதங்களையும் பெற்று ரசிகர்களை வெகுவாக தக்க வைத்துள்ளார்.
24 வருடகால கிரிக்கெட்டில் 100 சதங்களைப் பெற்ற ஒரே ஒரு வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதத்தைப் பெற்ற முதலாவது வீரராவார்
சர்வதேச போட்டிகளில் 34 ஆயிரம் ஒட்டங்களை பெற்ற ஒரே ஒரு வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஆறு உலக கிண்ண கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கிண்ணத்தை வெற்றிகொள்ள குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார்.
1996 ஆம் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பினை முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் ஏற்றிருந்தார்.
200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 68 அரைச்சதங்கள் அடங்கலாக 53 தசம் 78 என்ற சராசரியில் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களை அவர் பெற்றிருந்தார்.
463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் 96 அரைச்சதங்கள் அடங்கலாக 44 தசம் 83 என்ற சராசரியில் 18 ஆயிரத்து 426 ஓட்டங்களை  குவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் பின்னர் சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெற்றிருந்தார்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சாதனை சகாப்தம் சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தமை விசேட அம்சமாகும்..
இந்தியாவில் மாத்திரமல்லாது உலகம் முழுவதிலுமுள்ள கிரிகட் ரசிகர்களை கவர்ந்த சச்சின் டெல்டுல்கரின் கிரிகெட் பயணம் ஓய்ந்தாலும் , அவரது புகழ் கிரிகெட் வரலாற்றில் அழியாது இடத்தை பிடித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்