கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 9:37 am

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதை உள்ளிட்ட மேலும் சில வீதிகளில் இன்றும் விசேட வாகனப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் மற்றுமொரு அமர்வு பத்தரமுல்லயில் நடைபெறவுள்ளதால், இன்று காலை 7 மணிமுதல் 9 மணிவரை விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதிக்குள் காலிமுகத்திடலின் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம், காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, செஞ்சிலுவை சந்தி, நூலக சுற்றுவட்டம், தாமரைத் தடாக வீதி, ஹோர்ட்டன் பிளேஸ், டி.எஸ். கமிக்ஙை கட்டமைப்பு, காசல் வீதி, ஜயவர்தனபுர மற்றும் வோட்டர்ஸ் எட்ஜ் வரையான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதேபோன்று இன்றைய தினம் அரச தலைவர்கள் சிலர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவிருப்பதால், பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, ஹோர்ட்டன் பிளேஸ், டி.எஸ். கமிக்ஙை கட்டமைப்பு, பேஸ்லைன் வீதி, புதிய புதிய களனி பாலம் மற்றும் கட்டுநாயக்க வரையான அதிவேக வீதி பகுதிகளில் அவ்வப்போது வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக நண்பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் உள்ள காலப்பகுதிகளில் சுமார் 20 நிமிடங்களுக்கும், இரவு 7.30 முதல் 8.30 வரையான காலப்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கும் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இந்த காலப்பகுதிகளில் கொழும்பிற்குள் வருகின்ற வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்