காவத்தையில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை

காவத்தையில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை

காவத்தையில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 5:33 pm

காவத்தை பொரனுவ பகுதியில் கத்தியால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் காவத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகறாறு காரணமாக தனது மனைவியையும், உறவினரான பெண் ஒருவரையும் கணவர் இன்று காலை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மாமியார் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று மாலை நடத்தப்படவுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்