உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு

உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு

உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் மீதான இறக்குமதி தீர்வை குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 5:49 pm

நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும்  சின்ன வெங்காயம் ஆகியவற்றின் இறக்குமதி வரி  குறைக்கப்பட்டுள்ளதாக  நிதி மற்றும்  திட்டமிடல் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதற்கமைய உருளைக் கிழங்கு மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி 40 ரூபாவில் இருந்து 30 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன்   பெரிய வெங்காயம் மீதான 35 ரூபாவிலிருந்து 25 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் சின்ன வெங்காயம் மீது விதிக்கப்பட்டிருந்த 15 ரூபா வரி 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள    அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது
இம்முறை சிறு போகத்தின் போது, உள்நாட்டில் செய்கை பண்ணப்பட்ட உருளைக் கிழங்கு பெரிய வெங்காயம்  மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளது.
இந்த நிலையில்  எதிர்வரும் பண்டிகை காலத்தில்  நியாயமான விலையில் நுகர்வோருக்கு இவற்றை பெற்றுக்கொடுக்கும்  வகையில் வரி சலுகையை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் விதைகள் மற்றும் உரத்தை மானிய விலையில் வழங்கிவருவதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையல் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அறுவடை காலத்தில் உள்நாட்டு விவசாயிகளுக்கு சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்காக சில பொருட்கள்மீதான வரியை பேணிச் செல்வதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் காரணமாக உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் போன்றவற்றின் உற்பத்தி அதிகரித்து உள்நாட்டு தேவையின் 50 வீதம் பூர்த்தி செய்யப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டளவில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்