இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 9:46 am

மாத்தளை – கண்டி வீதியின் எல்வல பகுதியிலும், எம்பிலிப்பிட்டி – பணாமுர பகுதியிலும் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை எல்வல பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
உக்குவளை பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பணாமுர பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று வீதியைவிட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில், அதனை செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்