இணைந்து செயற்படுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – சல்மான் குர்ஷித்

இணைந்து செயற்படுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – சல்மான் குர்ஷித்

இணைந்து செயற்படுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – சல்மான் குர்ஷித்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 9:20 am

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பொருட்டு இலங்கை வந்துள்ள இந்திய குழுவினருக்கு தலைமை வகிக்கின்ற இந்திய வெளிவிவகார அமைச்சர், பீ.பீ.சீ. செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் கலாநிதி மன்மோஹன் சிங் கலந்துகொள்ளாமை, முழுமையான விசாரணையை பிரித்தானிய பிரதமர் கோரியுள்ளமை, உயிர்வாழும் சுதந்திரத்தை பாதுகாத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பில் சல்மான் குர்ஷித்திடம் தமது செய்தியாளர் கேள்வியெழுப்பியதாக பீ.பீ.சீ. தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்திய பிரதமர் கலந்துகொள்ளாமையை பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பதாக கருதக்கூடாது என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் முடிவுற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி இந்தியா அறிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுபவங்களைப் பெறப் பெற இலங்கை முன்னேற்றத்தைக் காட்டும் என்றும் பீ.பீ.சீ. செய்தியாளரின் கேள்வியொன்றுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் பதிலளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்