வெளிவிவகார அமைச்சர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 8:34 pm

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  சிலரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய  நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின்    வெளிவிவகார செயலாளர் ஆகியோரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்புக்கள் வெவ்வேறாக  இன்று காலை முதல் இடம்பெற்றுள்ளன.
இதன்போது முக்கிய சில விடயங்கள் குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகளை தெளிவுபடுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்