வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையின் இரசாயனப் பதார்த்தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையின் இரசாயனப் பதார்த்தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையின் இரசாயனப் பதார்த்தங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 11:58 am

அண்மையில் வாயுக்கசிவு ஏற்பட்ட பிலியந்தலை தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்களை விரைவில் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சாரங்க அழகப்பெரும கூறினார்.
இந்த தொழிற்சாலை தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.
குழுவின் இடைக்கால ஆய்வறிக்கை அண்மையில் சுற்றாடல்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக டொக்டர் சாரங்க அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, தற்போது தொழிற்சாலை இயங்கும் இடத்தில் தொடர்ந்தும் இயங்குவதற்கான அனுமதியை இரத்து செய்ய அமைச்சு எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறியமையால், 70க்கும் அதிகமானவர்கள் நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து, தொழிற்சாலை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விடயங்களை அடுத்தவாரம் கெஸ்பாவ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்