வலி. வடக்கில் மக்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

வலி. வடக்கில் மக்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

வலி. வடக்கில் மக்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 7:25 pm


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்த மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது வீடுகள் அழிக்கப்படுவதை நிறுத்துமாறும், தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் வலியுறுத்தி இவர்கள் இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்று முன்தினம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மூன்றாவது நாளாகவும் தொடரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், வட மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு 8 மணிக்கு நிறைவடைய உள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்