பஸ்களில் பொருத்தப்பட்ட ஒலியெழுப்பிகள், அதிக ஒலியை எழுப்பும் அமுக்கத்தைக் கொண்டவை – ம.சு.அ.ச

பஸ்களில் பொருத்தப்பட்ட ஒலியெழுப்பிகள், அதிக ஒலியை எழுப்பும் அமுக்கத்தைக் கொண்டவை – ம.சு.அ.ச

பஸ்களில் பொருத்தப்பட்ட ஒலியெழுப்பிகள், அதிக ஒலியை எழுப்பும் அமுக்கத்தைக் கொண்டவை – ம.சு.அ.ச

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 12:17 pm

போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்ட ஒலியெழுப்பிகள், அதிக ஒலியை எழுப்பும் அமுக்கத்தைக் கொண்டவை என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் பஸ்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சாரங்க அழகப்பெரும ​தெரிவித்தார்.
உரிய தரத்தைக் கொண்டிராத, ஒலியெழுப்பிகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பொருத்தப்பட்ட ஒலியெழுப்பிகளால் ஏற்படுத்தப்படும் சத்தத்தினால் சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்கள் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, இவ்வாறான ஒலியெழுப்புகள் பொருத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு 3000 தொடக்கம் 5000 வரையில் அபராதம் அறவிட முடியுமெனவும், அவற்றை அரசுடமையாக்க முடியுமெனவும் அதிகார சபை தெரிவித்தது.
எவ்வாறாயினும், தற்போது சுற்றிவளைப்பின் முதற்கட்டமாக அவ்வாறான பஸ்களின் அனுமதிப் பத்திரத்தை பறிமுதல் செய்து, உரிய உபகரணங்களை பொருத்தியதன் பின்னர், அனுமதிப் பத்திரத்தை மீள வழங்கவுள்ளதாக சாரங்க அழகப்பெரும குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்