திஸா வாவி வனப் பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு?

திஸா வாவி வனப் பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு?

திஸா வாவி வனப் பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு?

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 8:21 am

அநுராதபுரம், திஸா வாவிக்கு அருகிலுள்ள வனப் பகுதியிலிருந்து மனித உடற்பாகங்களின் எச்சங்கள்  மீட்கப்பட்டுள்ளன.
காட்டுக்கு விறகு வெட்டுவதற்கு சென்றவர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று பிற்பகல் இந்த மனித உடற்பாகங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலிருந்த ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மனித எச்சங்கள் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.
இவை தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் வைத்திய பரிசோதனை என்பவை இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்