சோமாலியாவை தாக்கிய சூறாவளியில் 140 பேர் பலி

சோமாலியாவை தாக்கிய சூறாவளியில் 140 பேர் பலி

சோமாலியாவை தாக்கிய சூறாவளியில் 140 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 7:16 pm

சோமாலியாவை தாக்கிய சூறாவளியில் 140 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சோமாலியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் வீசிய புயலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சோமாலியாவை தாக்கிய சூறாவளியின் காரணமாக அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த  நாட்டின் வட கிழக்கு பகுதியின் தொடர்ந்தும்   பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
எனினும் மீட்புப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்