சர்வதேச நீரிழிவு தினம் இன்று

சர்வதேச நீரிழிவு தினம் இன்று

சர்வதேச நீரிழிவு தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 7:41 am

உலக நீரிழிவு தினம் இன்றாகும்.
“நீரிழிவு நோயிலிருந்து எமது எதிர்கால சந்ததியை பாதுகாப்போம்” என்பதே இம்முறை தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
உலக சனத்தொகையில் 200 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கையின் சனத்தொகையில் நான்கில் ஒரு வீதமானவர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
நாட்டில் தற்போது 10 வீதமான பாடசாலை மாணவர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற உணவுப் பழக்கவழக்கமே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக சீனி, உப்பு பாவனை, திடீர் உணவுகள் பாவனை, உடல்பருமனை உரிய அளவில் போனாமை மற்றும் உடற்பயிற்சி இன்மை காரணமாகவும் நீரிழிவு ஏற்படுகின்றது.
இந்த வருடத்தினை தொற்றாத நோய்கள் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சு, புற்றுநோய், நீரிழிவு போன்ற தொற்றாத நோய்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 40 வீதமானவர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தவர்களில் 19 வீதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
நீரிழிவு மேலும் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக டொக்டர் பாலித்த மஹிபால கூறினார்.
எனவே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உயரத்திற்கேற்ற பருமன், சீனி மற்றும் மாப்பொருள் பாவனையை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்