சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்

சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்

சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 9:10 am

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளதால் மும்பையில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சச்சின் டெண்டுல்கருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நோக்கில் மும்பை வங்கடே மைதானத்திலும், மைதானத்தை சூழவுள்ள வளாகத்திலும் விசேட நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சச்சின் டெண்டுல்கர், 200 ஆவது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல்லுடன் கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுக்கவுள்ளார்.
24 வருடங்கள் கிரிக்கெட் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர், இன்றைய போட்டியில் மேலும் 153 ஓட்டங்களைப் பெறுவாராயின் 16 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்வார்.
இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரேன் சந்த்ரபோல் இன்று தனது 150 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்