எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர் – டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர் – டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர் – டலஸ் அழகப்பெரும

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 1:49 pm

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நாட்டிற்குள் இனவாதத்தை தூண்டுவதற்கு முயல்வதாக இளைஞர் விவகார மற்றும்திறன்விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்தார்.
பொதுநலவாய இளைஞர் மாநாட்டை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள 72 இளைஞர் மன்றங்களுக்கும், 12 விளையாட்டு கழகங்களிற்கும் விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் கலந்து கொண்டிருந்தார்.
நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக இதன்போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும –
“எங்களுக்கு தெரியும் நாட்டில் பலவிதமாக இனவாதத்தை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கின்றன. பொதுநலவாயமாநாடு முதலாவதாக சிங்கப்பூரில் நடைபெற்றது. அதற்கு பின் அவுஸ்திரேலியா பர்த் நகரில் நடைபெற்றது. 1971லிருந்து 2011 வரையான காலப் பகுதியில் நடைபெற்ற அனைத்து பொதுநலவாய மாநாட்டிலும் எமது நாடு பங்குபற்றியது. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ்ஸ தான் பொதுநலவாய மாநாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தார். இதுதான் மாற்றம்”
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்