இரத்தினபுரியில் சடலங்கள் மீட்பு

இரத்தினபுரியில் சடலங்கள் மீட்பு

இரத்தினபுரியில் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2013 | 12:27 pm

இரத்தினபுரி, வெவல்வத்தை, பம்பரலகந்த பகுதியிலுள்ள ஓடைக்கருகில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதிமுதல் காணாமற்போயிருந்த பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
54 வயதான அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் இரத்னபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் பகுதியிலும் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்