ஹையான் சூறாவளியால் 2500 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

ஹையான் சூறாவளியால் 2500 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

ஹையான் சூறாவளியால் 2500 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2013 | 10:06 am

ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதை போல் அல்லாது  மிகவும் குறைந்தளவிலானோரே பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளியினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி பெனிக்கோ அக்குய்னோ தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹையான் சூறாவளியினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளியானது.
எனினும் இரண்டாயிரத்து 500 பேரே சூறாவளியினால் உயிரிழந்துள்ளதாக அக்குய்னோ தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் மத்திய பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த ஹையான் சூறாவளித் தாக்கத்தால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸாரும் , உள்நாட்டு தகவல்களும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 11 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும , 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்திருந்தது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்