நான்கு விக்கெட்டுகளால் வெற்றி நியூஸிலாந்து வசம்

நான்கு விக்கெட்டுகளால் வெற்றி நியூஸிலாந்து வசம்

நான்கு விக்கெட்டுகளால் வெற்றி நியூஸிலாந்து வசம்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2013 | 9:52 am

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போட்டி மழை காரணமாக 23 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 23 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களையும் , திலக்கரட்ன தில்ஷான் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
198 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 23 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.
மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை நியூஸிலாந்து அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்