சச்சின் டெண்டுல்கார், கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் – ப்ரையன் லாரா

சச்சின் டெண்டுல்கார், கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் – ப்ரையன் லாரா

சச்சின் டெண்டுல்கார், கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் – ப்ரையன் லாரா

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2013 | 2:34 pm

சச்சின் டெண்டுல்கார் , கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ப்ரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கார் நாளை மும்பை, வங்கடே மைதானத்தில்  ஆரம்பமாகவுள்ள   மேற்கிந்திய தீவுகளுக்கு  எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து   விடைபெறவுள்ளார்.
இந்நிலையில் உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் சச்சினுக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணமுள்ளனர்.
வேறு எந்தவொரு வீரருக்கும் கிடைக்கப் பெறாத மிக சிறந்த கிரிக்கெட் வாழ்வை சச்சின் பெற்றுள்ளதாகவும் ப்ரையன் லாரா தெரிவித்துள்ளார்.
40 வயதுடைய சச்சின் 16 வயதிலிருந்தே பெரும் சாதனைகளை ஈட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ச்ச்சின் டெண்டுல்கார் , கிரிக்கெட்டில் முஹமட் அலியாகவும் ,மைக்கல் ஜோர்தானாகவும் திகழ்வதாக லாரா கூறியுள்ளார்.
விளையாட்டு தொடர்பில் உரையாடும் பட்சத்தில்  நிச்சயமாக சச்சின் தொடர்பில் அங்கு பேசப்படும் எனவும் ப்ரையன் லாரா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுமார் 130 கோடி இந்திய மக்களுக்காக கிரிக்கெட் விளையாடுவது கடினம் எனவும்  தம்மை விட  2 ஆண்டுகள் முன்னதாக விளையாட ஆரம்பித்த சச்சின்,  ஆறு ஆண்டுகளின் பின்னர்  விடைபெறுவது வியக்கத்தக்கது எனவும் லாரா குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்