பிலிப்பைன்ஸ்சில் தேசிய பேரிடர் அனர்த்தப் பிரகடனம்

பிலிப்பைன்ஸ்சில் தேசிய பேரிடர் அனர்த்தப் பிரகடனம்

பிலிப்பைன்ஸ்சில் தேசிய பேரிடர் அனர்த்தப் பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2013 | 11:19 am

பிலிப்பைன்ஸ்சில் தேசிய பேரிடர் அனர்த்தப் பிரகடனத்தை அந்த நாட்டு ஜனாதிபதி பெனிக்னோ அக் க்யூனோ வெளியிட்டுள்ளார்.
ஹயான் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களில் பாரிய சேதங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூறாவளியில் உயிர் தப்பியவர்கள் உதவிகளைப் பெறுவதற்கு ஏக்கத்துடன் காத்திருப்பதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உலகில் அதி வேகமானது என கருதப்படும் இந்த சூறாவளியின் தாக்கத்தினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய ஆணைக்குழு, இந்தோனேஷியா, ஜப்பான், நியூசிலாந்து, உள்ளிட்ட மேலும் பல நாடுகளும் பிலிப்பைன்ஸ்சிக்கு உதவிகளை வழங்கியுள்ளன.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்