நிதிசார் விடயங்களை இரகசியமாக பேணும் நாடுகளின் பட்டியலில் சுவிட்ஸ்லாந்திற்கு முதலிடம்

நிதிசார் விடயங்களை இரகசியமாக பேணும் நாடுகளின் பட்டியலில் சுவிட்ஸ்லாந்திற்கு முதலிடம்

நிதிசார் விடயங்களை இரகசியமாக பேணும் நாடுகளின் பட்டியலில் சுவிட்ஸ்லாந்திற்கு முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2013 | 5:49 pm

நிதிசார் விடயங்களை இரகசியமாக பேணும் நாடுகளின் பட்டியலில் சுவிட்ஸ்லாந்து முன்னிலை வகிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வரி விதிப்புக்கள் தொடர்பில் ஆராயும் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
லக்ஸம்பேர்க், ஹொங் கொங், சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் அதி சிறந்த நிதி சார் நிறுவனங்கள் சுவிட்ஸ்லாந்தில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வங்கி இரகசியத் தன்மை, வினைத்திறனான வரி விதிப்பு முறைகள், நிதி மோசடிகளுக்கு எதிரான ஏற்பாடுகள் என்ற விடயங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்