சாம்பியன் பட்டம் ஜோக்கோவிச் வசம்

சாம்பியன் பட்டம் ஜோக்கோவிச் வசம்

சாம்பியன் பட்டம் ஜோக்கோவிச் வசம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2013 | 11:37 am

லண்டனில் நடைபெற்ற ஏ.ரி.பீ வேல்ட் ருவர் ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நொவெக் ஜோக்கோவிச் வெற்றிகொண்டுள்ளார்.
இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை ரபெயல் நடாலை 2-0 என்ற நேர் செட் கணக்கில் நெவெக் ஜோக்கோவிச் தோற்கடித்துள்ளார்.
போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய நொவெக் ஜோக்கோவிச் இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி. சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டார்.
இதன் மூலம் 26 வயதான நொவெக் ஜோக்கோவிச் தொடர்ச்சியாக 22ஆவது போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளார்.
இதேவேளை டேவிஸ் கிண்ண இறுதிப் போட்டியில் செக்குடியரசை எதிர்கொள்ளவுள்ள செர்பிய அணியுடன் நொவெக் ஜோக்கோவிச் இணைந்துகொள்ளவுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெல்கிரேட்டில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்