ஒரு நாள் தொடர் தென்னாபிரிக்கா வசம்

ஒரு நாள் தொடர் தென்னாபிரிக்கா வசம்

ஒரு நாள் தொடர் தென்னாபிரிக்கா வசம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2013 | 11:14 am

பாகிஸ்தான் அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற ஆட்டக்கணக்கில் தென்னாபிரிக்க அணி சுவீகரித்துள்ளது.
சாஜாவில் நடைபெற்ற தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் தென்னாபிரிக்க அணி 117 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஏ.பி.டி வில்லியஸ்சின் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஏ.பி.டி வில்லியஸ் 115 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், ஃபப் டுபிளசிஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
சயிட் அஜ்மல் மூன்று விக்கெட்டுக்களையும், ஜுனைட் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
269 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 35.3 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக சொஹைய்ப் மக்சூத் 53 ஓட்டடங்களைப் பெற்றதுடன், உமர் அக்மல் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
வெய்ன் பார்னல் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், வேனன் பிலெண்டர், ரெயான் மெக்-லரின் மற்றும் ஜே.பீ.டுமினி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஏ.பி.டி வில்லியஸ்சும், தொடரின் சிறப்பாட்டக்காரராக ரெயான் மெக்லரினும் தெரிவுசெய்யப்பட்டனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்