அமெரிக்காவில் ஈரானிய கலைஞர்கள் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் ஈரானிய கலைஞர்கள் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் ஈரானிய கலைஞர்கள் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2013 | 11:57 am

அமெரிக்காவில் நியூயோர்க்கில் வசிக்கும் ஈரான் கலைஞர்கள் நால்வர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஏனைய மூவரையும் கொலைசெய்து, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைகளுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத போதிலும், கொலையை நடத்தியவரும், கொலை செய்யப்பட்டவர்களும் வெவ்வேறான இசைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் இருவர் அமெரிக்காவில் அரசியல் புகலிடம் பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்