வியட்நாமையும் தாக்கும் ஹயான் சூறாவளி; ஆறு பேர் உயிரிழப்பு

வியட்நாமையும் தாக்கும் ஹயான் சூறாவளி; ஆறு பேர் உயிரிழப்பு

வியட்நாமையும் தாக்கும் ஹயான் சூறாவளி; ஆறு பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 12:16 pm

பிலிப்பைன்ஸ்சில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஹயான் சூறாவளி வியட்நாமின் வடபிராந்தியத்தை தாக்கியுள்ளது.
இந்த சூறாவளியின் வலு குறைவடைந்துள்ள போதிலும், தற்போது மணிக்கு 157 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வியட்நாமில் சூறாவளி தாக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்ட பிராந்தியங்களில் இருந்து சுமார் 6 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் புயல் எச்சரிக்கை மிகவும் தாமதமாக விடுக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தலைநகர் ஹனோய் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஹயான் சூறாவளியின் நகர்வு மாற்றம் பெற்றுள்ளதை அடுத்து சில பிராந்தியங்களில் சீனா புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உலக வரலாற்றில் மிகவும் வேகமானது என கணிக்கப்பட்ட இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பிலிப்பைபன்ஸ்சில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்