வினாத்தாளில் குறைபாடு; 4 மணித்தியாலங்கள் பரீட்சை எழுதிய மாணவர்கள்

வினாத்தாளில் குறைபாடு; 4 மணித்தியாலங்கள் பரீட்சை எழுதிய மாணவர்கள்

வினாத்தாளில் குறைபாடு; 4 மணித்தியாலங்கள் பரீட்சை எழுதிய மாணவர்கள்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 2:27 pm

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்துகின்ற முன்னோடிப் பரீட்சையின் தமிழ் மொழியும் இலக்கியமும் வினாத்தாளில் குறைப்பாடுகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடத்தப்படுகின்ற தமிழ் மொழியும் இலக்கியமும் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்குரிய ஒரு பிரிவு மூன்றாம் பகுதிக்குரிய கேள்விகளுடன் இணைத்து அச்சிடப்பட்டுள்ளது.
அத்தோடு மூன்றாம் பகுதிக்குரிய பிரிவொன்றும் பகுதி இரண்டுக்குரிய கேள்விகளுடன் அச்சிடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு பகுதிகளுக்கும் பதில் எழுதுவதற்காக மாணவர்களுக்கு தலா இரண்டு மணித்தியாலங்கள் வீதம் வழங்கப்பட வேண்டிய நிலையில் அவர்கள் இடைவேளையின்றி தொடர்ந்தும் நான்கு மணித்தியாலம் பரீட்சை எழுதவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவுக்கான மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பி.எஸ்.சதீசிடம் வினவியபோது பரீட்சை நிலையத்திற்கு சென்று பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராய்வதாக பதிலளித்தார்.
இதேவேளை, மத்திய மாகாண சாதாரண தர முன்னோடி பரீட்சையின் தமிழ் மொழியும்  இலக்கியமும் வினாத்தாளிலுள்ள குளறுபடிகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்