மோடிக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா நிராகரிக்க முடியாது – பா.ஜ.க

மோடிக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா நிராகரிக்க முடியாது – பா.ஜ.க

மோடிக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா நிராகரிக்க முடியாது – பா.ஜ.க

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 12:26 pm

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவுசெய்யப்படின் அவருக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா நிராகரிக்க முடியாதென பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு செல்லதற்கு கட்டாயமான காரணங்கள் எதுவும் இல்லை என கட்சியின் தலைவர் சட்ரூஹான் சின்ஹா கூறியுள்ளார்.
அனைத்து அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தீர்மானங்களும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்காதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோடிக்கு வீசா வழங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறித்து எழுப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் இடம்பெற்ற மதக்கலவரத்திற்கு நரேந்திர மோடியே காரணம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கலவரத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் நரேந்திர மோடிக்கு வீசா வழங்குவதை 2005ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா நிராகரித்து வருகின்றது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவதுடன், காங்கிரஸ் கட்சிக்கு அவர் பலத்த சவலாக இருப்பார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்