பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 1:32 pm

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்படில் மேலும் இருவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியதாக கூறப்படும் கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த கோடிஸ்வர பெண் வர்த்தகர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வப்போது கப்பம் கோரியதால் குறித்த பொலிஸ் இன்ஸ்பெக்டரை கடத்திச் சென்று கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை சந்தேகநபரான பெண் குழுவொன்றிடம் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜுலை மாதம் 21 ஆம் திகதி தலங்கமவில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கடத்தப்பட்டார்.
பின்னர் அவரது சடலம் ஜூலை 28 ஆம் திகதி கித்துல்கல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்