பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி கப்பம் பெற முயற்சித்தவர் கைது

பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி கப்பம் பெற முயற்சித்தவர் கைது

பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை காட்டி கப்பம் பெற முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 7:51 pm

பெண்ணொருவரின் ஆபாசப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, அவரது கணவரிடம் ஐந்தரை இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொள்ள முயற்சித்த இளம் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அளுத்கமயில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த இளம் தம்பதியினர் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச்சென்று, அவர்களுடன் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்பின்னர், 22 வயதான அந்த இளைஞர், 52 வயதான குறித்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததுடன், அவற்றை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, அந்தப் பெண்ணின் கணவரிடம் ஐந்தரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது, சந்தேகநபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்