பூமியை வந்தடைந்தது ஒலிம்பிக் சுடர்

பூமியை வந்தடைந்தது ஒலிம்பிக் சுடர்

பூமியை வந்தடைந்தது ஒலிம்பிக் சுடர்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 6:09 pm

2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடர் விண்வெளிப் பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் பூமியை வந்தடைந்துள்ளது.
சுடரை தாக்கிய விண்கலம் கசகஸ்தானில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
சுடரைத் தாங்கிய சொயூஸ் விண்கலம் நேற்றைய தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியிருந்தது.
நேற்று முன்தினம் ஒலிம்பிக் சுடரை கையேற்ற சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள வீரர்கள், அதனுடன் விண்வெளியில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் சோச்சியில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாம் பலமான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் முதல் முறையாக ஒலிம்பிக் சுடரை ரஷ்யா விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்