புலமைப்பரிசில் பரீட்சையின் தரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை

புலமைப்பரிசில் பரீட்சையின் தரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை

புலமைப்பரிசில் பரீட்சையின் தரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 7:39 pm


புலமைப்பரிசில் பரீட்சையின் தரம் தொடர்பில் கல்வி நிபுணர்களிடம் விடயங்களை கேட்டறிந்து கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் 35 கல்வி நிபுணர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார்.
அவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரதீபா மஹானாமஹேவா:-
”புலமைப்பரிசில் பரீட்சையின் தரம் மற்றும் அதன் தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. இதன்பிரகாரம் புலமைப்பரிசில் பரீட்சையின் போது வழங்கப்படுகின்ற இரண்டு வினாத்தாள்களை ஒன்றாக்குவது மற்றும் குறித்த  பரீட்சையை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்குவதன் முக்கியத்துவம் குறித்து ஆராயப்படவுள்ளது”.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்