சோமாலிய அகதிகள் 5 இலட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர் – ஐ.நா

சோமாலிய அகதிகள் 5 இலட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர் – ஐ.நா

சோமாலிய அகதிகள் 5 இலட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர் – ஐ.நா

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 5:55 pm

கென்யாவிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான சோமாலிய அகதிகள் நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்டு அரசாங்கங்களுடனும் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு உடன்படிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆலயம் கூறியுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அடுத்த மூன்று வருடங்களில் சோமாலியா தாமாக முன்வந்து மக்களை நாட்டுக்கு திரும்பி அழைக்கவுள்ளது.
சோமாலியாவில் நிலவும் வறுமை மற்றும் யுத்தம் காரணமாக அகதிகளாக மக்கள் கென்யாவிற்குள் பிரவேசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் மூலம் அகதிகள் சோமாலியாவில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க உதவி புரியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதனிடையே தமது நாட்டு பிரஜைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக சோமாலியாவின் பிரதிப் பிரதமர் கூறியுள்ளார்.
பயங்கரவாதம் தற்போதும் பிராந்தியத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதிப் பிரதமர் பௌசியா யூசெப் அதாம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்