ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் -அம்ரேந்திர பிரதாப் சிங்

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் -அம்ரேந்திர பிரதாப் சிங்

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் -அம்ரேந்திர பிரதாப் சிங்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 6:03 pm

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
பீகாரின் தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இதனைத் தாம் தெரிவிப்பதாக மாநிலத்தின் பிரதி சபாநாயகர் அம்ரேந்திர பிரதாப் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை தொடர்ந்து பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து வேறுபாடுகள் காரணமாக பாரதீய ஜனதா கட்சியில் இருந்து கடந்த ஜுன் மாதம் ஐக்கிய ஜனதா தளக் கட்சி பிரிந்திருந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் நீதிஸ்குமார் பாரதீய ஜனதா கட்சியை ஏமாற்றியுள்ளதாக சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்