இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச் – நடால்

இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச் – நடால்

இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச் – நடால்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 12:31 pm

லண்டனில் நடைபெறும் ஏ.ரி.பீ ரூவர் பைனல்ஸ் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நொவெக் ஜோக்கோவிச், ரபெயல் நடாலை எதிர்கொள்ளவுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வவ்ரிங்காவை தோற்கடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 21 ஆவது போட்டியிலும் அவர் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.
இந்தப் போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நொவெக் ஜோக்கோவிச் வெற்றிபெற்றிருந்தார்.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் ரொஜர் பெடரரை வெற்றிகொண்ட ரபெயல் நடால் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்