ஆளுநரின் உரையை புறக்கணித்து வட மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் வெளிநடப்பு

ஆளுநரின் உரையை புறக்கணித்து வட மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் வெளிநடப்பு

ஆளுநரின் உரையை புறக்கணித்து வட மாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் வெளிநடப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 1:52 pm

வடமாகாண சபையின் இன்றைய இரண்டாவது அமர்வின்போது  மூன்று உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மாகாண சபை அமர்வில் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் வெளிநடப்பு செய்ததாக எமது யாழ். செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநரின் கன்னியுரை இடம்பெற்ற போது வடமாகாண சபை உறுப்பினர்களான க.சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன்,  மற்றும் ச.சுகிர்தன் ஆகியோர் சபையை விட்டு வெளியேறியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்