அநுராதபுரம் ஐவர் படுகொலை சம்பவம்; சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்

அநுராதபுரம் ஐவர் படுகொலை சம்பவம்; சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்

அநுராதபுரம் ஐவர் படுகொலை சம்பவம்; சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 7:55 pm

அநுராதபுரம், விஹார ஹல்மில்லகுளம் பகுதியில் ஐவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தக் குற்றம் தொடர்பில் இன்று சுயவிருப்பின்பேரில் வாக்குமூலம் வழங்குவதாக இதற்குமுன்னர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்த போதிலும், இன்று வாக்குமூலம் வழங்குவதற்கு மறுத்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ருவன்திக்கா மாறசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட இரத்தக் கறை படிந்த அனைத்துப் பொருட்களையும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கும், மரபணு பரிசோதனைக்கும் அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்