வலிகாமத்தில் சில பகுதிகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

வலிகாமத்தில் சில பகுதிகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

வலிகாமத்தில் சில பகுதிகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 9:26 pm

யாழ். மாவட்டத்திலே தற்போது விடுவிக்கப்படாத சில பகுதிகளில் விரைவில் மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கிலிலுள்ள சில பகுதிகளே மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் பலாலி கிழக்கு மற்றும் பலாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவுகளும், வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள வலலாய் கிராம அலுவலகர் பிரிவில் எஞ்சிய பகுதிகளிலும், மீள்குடியமர்த்துவதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரதேசங்களிலுள்ள மக்கள் தமது பதிவுகளை, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும், மற்றும் வலலாய் பிரிவைச் சேர்ந்தவர்கள் கோப்பாய் பிரதேச செயலகத்திலும் இயங்கும், கிராம அலுவலர்களோடு தொடர்புக் கொண்டு மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  
குடும்ப அட்டை, அடையாள அட்டை, காணி உறுதி அல்லது உறுதிப்படுத்தக்கூடிய வேறு ஆவணங்கள் ஆகியவற்றோடு சமூகமளித்து, தங்களது மீள்குடியேற்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்