ரா.ரஜனிகாந்த் சடலமாக மீட்பு

ரா.ரஜனிகாந்த் சடலமாக மீட்பு

ரா.ரஜனிகாந்த் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 9:36 pm


திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவின் குயின்ஸ்பரி தோட்டத்தில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட ஆண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா தோட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய ராஜகோபால் ரஜனிகாந்த் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குயின்ஸ்பரி தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வீழ்ந்த இவர் திடீரென உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்