மாலைதீவின் ஜனாதிபதி தேர்தல் மீண்டும் ஒத்தி வைப்பு

மாலைதீவின் ஜனாதிபதி தேர்தல் மீண்டும் ஒத்தி வைப்பு

மாலைதீவின் ஜனாதிபதி தேர்தல் மீண்டும் ஒத்தி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 2:18 pm

மாலைதீவின் இரண்டாம் கட்ட  ஜனாதிபதி தேர்தல் மேலும் 6 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாலைதீவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் 49.4 வீத வாக்குகளால் முன்னிலை வகிக்கின்றார்.
எனினும்  ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை அவருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதனையடுத்து மீண்டும் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் இந்த தேர்தல் இன்று நடைபெறுவதிவலும் இழுபறி நிலை காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய ஜனாதிபதி  பதவியேற்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால் இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்படுமா? அல்லது உச்ச நீதிமன்றம்  ஏற்கனவே அறிவித்தது போன்று  தற்போதைய ஜனாதிபதி முஹம்மது வாஹித் நிரந்தர ஜனாதிபதியாக  பதவியில் தொடர்வாரா என்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்