மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லை – பொன்சேகா

மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லை – பொன்சேகா

மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லை – பொன்சேகா

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 9:34 pm


மக்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
வலஸ்முல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சரத் பொன்சேகா;-
”ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் மக்கள் குறித்து கவனம் கொள்ளாது தம்மைப் பற்றி மாத்திரம் சிந்திக்கின்றார்கள். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார்கள். மக்களை எமாற்றினார்கள். அதனால் நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே மக்கள் இன்று எதிர்காலம் குறித்து நம்பிக்கை இன்றி இருக்கின்றனர். இன்றைய நாளைப் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றனர். நாளைய நாள் குறித்து சிந்திப்பதில்லை. எனவே மக்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி இருக்கின்றனர். அரசியல்வாதிகள் தொடர்ந்தும் சுகபோகத்தை அனுபவிக்கின்றனர். 100 கிலோமீற்றர் தூரம் கொண்ட அதிவேக வீதி காலிவரை நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் அதற்கு செலவிட்ட தொகையைில் அரைவாசித் தொகை 2ஆம் கட்டமான 26 கிலோமீற்றருக்கு செலவிடப்பட்டுள்ளது. காலியிலிருந்து மா்ததறை வரை அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கு காலிவரை செலவிடப்பட்டதைப் போன்று ஐந்து மடங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் அதிவேக வீதி விளையாட்டு”.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின் வீரர்கள் மக்கள் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுசில் கிந்தெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சுசில் கிந்தெல்பிட்டிய;-
”2009 இல் நிறைவடைந்த இறுதிக் கட்ட யுத்தத்தைத் தொடர்ந்து இவர் தான் இநத நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார். இவர்தான் நாட்டுக்கு முதன் முதலில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தவர். இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டாவது போராட்டத்தின் வீரர்கள் நீங்கள். அச்சமின்றி நீங்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள். இந்த நாட்டின் யுத்த வரைபடத்தை மாற்றியவர் எமது தலைவர் ஜெனரல் சரத்பொன்சேகா. எமது நாட்டின் அரசியல் வரைபடத்தை புதிதாக வரைவதும் ஜெனரல் சரத் பொன்சேகா என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்”.
  


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்