பிலிப்பைன்ஸ் சூறாவளித் தாக்கத்தால் 10,000 பேர் பலி – பொலிஸார்

பிலிப்பைன்ஸ் சூறாவளித் தாக்கத்தால் 10,000 பேர் பலி – பொலிஸார்

பிலிப்பைன்ஸ் சூறாவளித் தாக்கத்தால் 10,000 பேர் பலி – பொலிஸார்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 12:48 pm

பிலிப்பைன்ஸில்  ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தால்  பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் மிக வேகமாக  வீசிய சூறாவளியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஹைய்யான் சூறாவளியால் மில்லியன்’ கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினாலும் , இடிந்து வீழ்நத கட்டடங்களுக்கும் சிக்குண்டுமே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சில பகுதிகளில் போக்குவரத்துக் கட்டமைப்புக்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளதால்  நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய நிவாரணப் பணிகளுக்காக  ஹெலிகொப்டர்களையும் , தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்