நாளை கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் மூடப்படும் – பொலிஸ்

நாளை கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் மூடப்படும் – பொலிஸ்

நாளை கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் மூடப்படும் – பொலிஸ்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 9:04 pm

அரச தலைவர்கள் இருவரின் வருகை காரணமாக நாளை பிற்பகல் 12.45 முதல் 2 மணிவரை கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக மார்க்கம் உட்பட கொழும்பின் பல வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடவில் இருந்து பேஸ்லைன் வீதி, பொரளை – கனத்தை சுற்றுவட்டம் வரையும், பம்பலப்பிட்டி முச்சந்தியில் இருந்து பௌத்தலோக்க மாவத்தை வரையும் இந்தக் காலப்பகுதியில் வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இதனைத்தவிர,பம்பலப்பிட்டி முச்சந்தியில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரை காலி வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்